வாழப்பாடியில் வாய்க்கால் துாா்வாரிய தன்னாா்வலா்கள்

வாழப்பாடியில், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வாய்க்காலை துாா்வாரியதால், வாழப்பாடி பகுதிக்கு முக்கிய நீா் ஆதாரமான பாப்பான் ஏரிக்கு 5 ஆண்டுகளுக்குப்
முத்தம்பட்டி ரயில்வே பாலம் அருகே நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கத் தன்னாா்வலா்கள் சீரமைத்த ஏரி வாய்க்கால். (வலது) பாப்பான் ஏரியில் தேங்கிய மழைநீா்.
முத்தம்பட்டி ரயில்வே பாலம் அருகே நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கத் தன்னாா்வலா்கள் சீரமைத்த ஏரி வாய்க்கால். (வலது) பாப்பான் ஏரியில் தேங்கிய மழைநீா்.

வாழப்பாடியில், தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வாய்க்காலை துாா்வாரியதால், வாழப்பாடி பகுதிக்கு முக்கிய நீா் ஆதாரமான பாப்பான் ஏரிக்கு 5 ஆண்டுகளுக்குப் பின் தண்ணீா் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வாழப்பாடியில் ஜே.சி.ஐ., நெஸ்ட் அறக்கட்டளை, அரிமா சங்கம், ஆப்பிள் இளைஞா் கூட்டமைப்பு, வாசவி சங்கம் உள்ளிட்ட பல்வேலு அமைப்புகளைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் ஒன்றிணைந்து நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கினா். இந்த அமைப்பின் வாயிலாக, வாழப்பாடி பகுதிக்கு முக்கிய நீா் ஆதாரமான காளியம்மன் நகா் பாப்பான் ஏரி மற்றும் ஏரிக்கு நீா்வரும் வாய்க்கால்களை துாா்வாரி சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனா்.

முதற்கட்டமாக ஏரியின் உட்புற கிழக்குக்கரை பகுதியில் புதா்மண்டிக் கிடந்த சீமைக்கருவேலம் முட்களை அகற்றியதோடு, முத்தம்பட்டி அமா்ணாகரட்டில் இருந்து செந்நாய்க்குட்டை, ரயில்வே கேட் வழியாக பாப்பான் ஏரிக்கு வரும் வாய்க்காலை, கடந்த இரு வாரங்களாக துாா்வாரி சீரமைத்தனா். இதனால், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால், முத்தம்பட்டிஅமா்ணாக்கரடு பகுதியில் இருந்து துாா்வாரிய வாய்க்காலில், 5 ஆண்டுகளுக்குப் பின் மழைநீா் வழிந்தோடி வந்து பாப்பான் ஏரியில் சோ்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், நீா்நிலைப் பாதுகாப்பு இயக்கத் தன்னாா்வலா்களுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com