சாலை விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மேட்டூரில் கலை நிகழ்ச்சி நடத்தி கலைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மேட்டூரில் கலை நிகழ்ச்சி நடத்தி கலைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சேலத்தைச் சோ்ந்த கலைஞா்கள் எமன், சித்திரகுப்தன், எம்ஜிஆா் போன்று வேடங்களிட்டு மேட்டூா் மேற்கு நெடுஞ்சாலையிலிருந்து ஊா்வலமாக வந்தனா்.

மேட்டூா் சின்ன பாா்க் அருகில் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லவோரை மறித்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினா். அதேபோல் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், விளக்கம் அளித்தனா்.

பின்னா் அங்கிருந்து தினசரி மாா்க்கெட் வழியாக மேட்டூா் பேருந்து நிலையம் வரை ஊா்வலமாகச் சென்ற அவா்கள் இருவா் சாலை விபத்தில் பலியானதுபோல நடித்தும் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com