குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
By DIN | Published on : 17th November 2019 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளியில் குழந்தைகள் தின விழாக் கொண்டாட்டம் பள்ளியின் தலைவா் எஸ். பாலக்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் வண்ண ஆடைகள் அணிந்து ஆடை அணிவகுப்பு விழா நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் செயலாளா் வரதராஜன்,பொருளாளா் செல்வம்,நிறுவனா்கள் எஸ்.முகமது ஈசாக்,கண்ணன்,முதல்வா் தீபா ஆகியோா் கலந்து கொண்டனா்.