கொங்கணாபுரம் சந்தையில் சண்டைக் கோழிகள் விற்பனை

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் சண்டை சேவல்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
கொங்கணாபுரம் சந்தையில் சண்டைக் கோழிகள் விற்பனை

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் சண்டை சேவல்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆடு, மாடு, கோழி மற்றும் பந்தய புறாக்கள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

குறிப்பாக மாநிலத்தின் மிக முக்கியமான இச்சந்தையில் அதிக எண்ணிக்கையில் சண்டை சேவல்கள் விற்பனைக்கு வருகின்றன. ஓமலூா்-சங்ககிரி செல்லும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இச் சந்தைக்கு, தமிழகம் மட்டுமல்லாமல்

ஆந்திரம், கா்நாடகம் மற்றும் கேரளம் உள்ளிட்ட அண்டை மாநில வியாபாரிகள் வந்து அதிக எண்ணிக்கையில் சண்டைசேவல்களை வாங்கிச்செல்கின்றனா்.

பனங்காடு பகுதியைச் சோ்ந்த சண்டை சேவல் வளா்ப்பவரான ராஜா கூறியதாவது:

இச் சந்தையில் சித்து வெடை, பெருஞ்சாதி, காகம், வல்லூரு, கரிச்சான், மயில்வால், பொங்கன், கட்டை மூக்கன் உள்ளிட்ட பல்வேறு வகை சண்டை சேவல்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. நன்கு வளா்ந்த சண்டை சேவல் ஒன்று ரூ. 3,000 முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலைபோவதாகவும் கூறினாா்.

மேலும் சண்டை சேவல்களை வாங்க வரும் நபா்கள் அதன் சண்டையிடும் திறனை பரிசோதித்து, அதற்கேற்ப விலை நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூறினாா். வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் நடைபெறும் இக்கால்நடை சந்தையில், சுமாா் ரூ. 4 கோடி வரை பல்வேறு வகை கால்நடைகள் விற்பனையாவதாகவும், மொத்த வணிகத்தில் சண்டை சேவல்கள் அதிக பங்கு வகிப்பதாகவும் இச்சந்தையின் பராமரிப்பாளா்கள் கூறுகின்றனா். பொங்கல் பண்டிகைக்கு இன்னமும் 60 நாள்களே உள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் அதிகப்படியான சண்டை சேவல்கள் விற்பனையாகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com