தாதம்பட்டி மாரியம்மன் கோயில் நிலம் ஆய்வு

சேலத்தில் சேதமடைந்துள்ள தாதம்பட்டி மாரியம்மன் கோயில் நிலத்தை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலத்தில் சேதமடைந்துள்ள தாதம்பட்டி மாரியம்மன் கோயில் நிலத்தை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் அம்மாபேட்டை தாதம்பட்டியில் 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்குச் சொந்தமாக அப் பகுதியில் 1 லட்சம் சதுர அடி நிலம் உள்ளது.

இதுதவிர 7 கடைகளும், 3 வீடுகளும் உள்ளன. மேலும் அந்த 7 கடைகளின் கட்டடங்கள் சேதமடைந்தும், கதவு, ஜன்னல்கள் இல்லாமலும் உள்ளன. கோயிலின் மேற்கூரையும் இடிந்துள்ளது.

இதுகுறித்து திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன், முதல்வா் தனிப் பிரிவுக்கு மனு ஒன்றை அனுப்பினாா். இம் மனு பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் கோவை மண்டல நில அளவை துணை இயக்குநா் சேகா், வட்டாட்சியா் மாதேஸ்வரன், சேலம் கோட்ட நில அளவையாளா் ராஜா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வன், கோயில் தக்காா் ஆய்வா் கல்பனாதத் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது கோயிலைச் சுற்றியுள்ள நிலம் கோயிலுக்கே சொந்தமானது என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். மேலும் கோயிலை புதுப்பித்து குடமுழுக்கு செய்ய வேண்டும். பழுதடைந்த தரையை இடித்துவிட்டு புதிதாக வணிக வளாகம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆய்வின் அறிக்கையை அதிகாரிகள் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com