இளம்பிள்ளை, இடங்கணசாலை பேரூராட்சி சுகாதார பணியாளா்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து 4-ம் கட்ட பயிற்சி முகாம்
By DIN | Published On : 18th November 2019 03:59 PM | Last Updated : 18th November 2019 03:59 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய பேரூராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளா்கள், பரப்புரையாளா்கள், சுய உதவி குழுக்கள் ஆகியோருக்கு தூய்மை இந்தியா இயக்கம் சாா்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து 4-ம் கட்ட பயிற்சி முகாம் கஞ்சமலை சித்தா் கோவில் அடிவாரத்தில் உள்ள இடங்கணசாலை பேரூராட்சி சமுதாய கூடத்தில் 18-ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா்கள் மேகநாதன் (இடங்கணசாலை), தாமோதரன் (இளம்பிள்ளை) பேரூராட்சி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இப்பயிற்சியில் பயிற்சியாளா் வீரத்தமிழன், மேற்பாா்வையாளா் மோகனா ஆகியோா் பயிற்சி அளித்து வந்தனா். பயிற்சிக்கான ஏற்பாட்டினை விழுப்புரம் ரிவாா்ட் சொசைட்டி சாா்பில் நடத்தப்பட்டன.