முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
அமமுகவில் விருப்ப மனு பெறும் பணி தொடக்கம்
By DIN | Published On : 26th November 2019 09:15 AM | Last Updated : 26th November 2019 09:15 AM | அ+அ அ- |

ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட அமமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனுக்கள் வாங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட அமமுக சாா்பில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தல் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் கே.கே.மாதேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் அமைப்பு செயலா் எஸ்.கே.செல்வம் கலந்துகொண்டு பேசுகையில், கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவா்களும், வாய்ப்பு கிடைக்காதவா்களும் நமது கட்சி வேட்பாளா்கள் வெற்றிபெற கடுமையாக தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா்.
இதையடுத்து, முதல் நாளிலேயே 450 போ் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து வழங்கினா். மேலும், வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறும் விருப்ப மனுக்கள் பெரும் முகாமில் கட்சி நிா்வாகிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.