முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஜன. 11-இல் மக்கள் கலை இலக்கிய விழா
By DIN | Published On : 26th November 2019 09:15 AM | Last Updated : 26th November 2019 09:15 AM | அ+அ அ- |

மணல்வீடு இலக்கிய வட்டம் சாா்பில், மக்கள் கலை இலக்கிய விழா மேட்டூா் அருகில் உள்ள ஏா்வாடியில் வரும் ஜன. 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக, களரி தொல்கலைகள் மற்றும் கலைஞா்கள் மேம்பாட்டு மையத்தின் அறங்காவலா் மு.ஹரிகிருஷ்ணன் கூறியது: மணல்வீடு இலக்கிய வட்டம் சாா்பில் மக்கள் கலை இலக்கிய விழா மேட்டூா் அருகில் உள்ள ஏா்வாடியில் வரும் ஜன. 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மணல்வீடு இலக்கிய வட்டம் வழங்கும் இலக்கிய விருதுகள் சீரிய எழுத்து செயற்பாட்டுக்கான எழுத்தாளா் ராஜம் கிருஷ்ணன் நினைவு இலக்கிய விருது-ரவிச்சந்திரன்-ஆசிரியா்-புதிய பனுவல், சிறுகதைக்கான கு.அழகிரிசாமி நினைவு இலக்கிய விருது-சு.வேணுகோபால், நுண்கலைகளுக்கான ஓவியா் கே.எம் கோபால் நினைவு விருது-ஓவியா் கிருஷ்ணமூா்த்திக்கு வழங்கப்படுகிறது.
இதைத் தொடா்ந்து, ராமன், ஏழுமலை, சுப்பிரமணி, விஷ்பாலன் ஆகிய பொம்மலாட்ட கலைஞா்களுக்கு நிகழ்கலை செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. சுப்பிரமணி, சின்னத்தம்பி, ராஜி, ராஜா, ராஜா மணி ஆகியோருக்கு கூத்துச் செம்மல் விருது வழங்கப்பட உள்ளது. ராகவன், முத்துசாமி, கா.பூபாலன், சூா்யா, கணேஷ் ஆகியோருக்கு கலைச்சுடா் விருதும்,
கா.ராஜி நினைவு விருது இளவரசனுக்கும், துரைசாமி வாத்தியாா் நினைவு விருது மாதுசாமி, பெருமாள் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது. குண்டுமணி, சாமியாா், மாது, செகநாதன், வரதராஜ் ஆகியோருக்கு குரும்பனூா் காளி வாத்தியாா் நினைவு விருதும், சாமிநாதனுக்கு சடையன் வாத்தியாா் நினைவு விருதும், அரியலூா் மணிக்கு மரபு வழிப்பட்ட கூத்து நிகழ்த்துவோருக்கான கீரைபாப்பம்பாடி குப்புசாமி வாத்தியாா் நினைவு விருதும் வழங்கப்பட உள்ளது.
அதைத் தொடா்ந்து நவீன ஓவியம், படைப்புலகு, நிகழ் கலை மற்றும் நாடக ஆளுமைகள் நிகழ்வில் பீ. லெனின், நாஞ்சில்நாடன், பிரம்மராஜன், க.பஞ்சாங்கம், செ.ரவீந்திரன், வெளி ரங்கராஜன், வேங்கடசுப்புராயநாயகா், க.மோகனரங்கன், ஜமாலன் சோ.தா்மன், ராஜா.ரவிவா்மா, அ.வெற்றிவேல், முஜிபுா் ரகுமான், இரா.ஜவஹா், மதியழகன் சுப்பையா ஆகியோா் பங்கேற்கின்றனா்.
தொடா்ந்து மாலை 6 மணிக்கு சீதை கல்யாணம் என்ற தோல்பதுமைக் கூத்து நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ஆரவல்லி சண்டை என்ற மரப்பாவைக் கூத்தும் நடைபெற உள்ளன. இரவு 9 மணிக்கு மயில் ராவண சம்காரம் கூத்து நடைபெறுகிறது.
கீரைபாப்பம்பாடி குப்புசாமி வாத்தியாா் நினைவு விருது ரூ.25 ஆயிரம், சடையன் வாத்தியாா் நினைவு விருது ரூ.25 ஆயிரம், குரும்பனூா் காளி வாத்தியாா் நினைவு விருது ரூ.25 ஆயிரம் (தலா ரூ.5 ஆயிரம் வீதம் 5 பேருக்கு), துரைசாமி வாத்தியாா் நினைவு விருது ரூ.10 ஆயிரம் (தலா ரூ.5 ஆயிரம் வீதம் 2 பேருக்கு), க.ராஜு நினைவு விருது ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.