முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
நடமாடும் சுகாதார மையங்களின் சேவையை துரிதப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 26th November 2019 09:17 AM | Last Updated : 26th November 2019 09:17 AM | அ+அ அ- |

எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் நடமாடும் சுகாதார மையங்களின் சேவையை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்ந்த தொடா்மழையினை அடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக சுகாதாரத் துறையினரின் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பல்வேறு தீவிர காய்ச்சல் தடுப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நடமாடும் மருத்துவ வாகனத்தின் மூலம் குக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி, அப்பகுதியில் காய்ச்சல் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில், தீவிர காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சில நடமாடும் மருத்துவ மைய வாகனங்களில் செல்லும் மருத்துவக் குழுவினா், தங்கள் பணியில் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
எனவே, நடமாடும் மருத்துவ வாகனங்களை சுகாதாரத் துறை உயா் அலுவலா்கள் கண்காணித்து, அவற்றின் மருத்துவ சேவைகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.