முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
நவ. 29-இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 26th November 2019 09:15 AM | Last Updated : 26th November 2019 09:15 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வரும் நவ. 29-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ. 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு வேளாண் சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.