Enable Javscript for better performance
மண்ணூா், பொன்னம்பாளையம் பள்ளிக்குசிறந்த பள்ளிக்கான விருது- Dinamani

சுடச்சுட

    

    மண்ணூா், பொன்னம்பாளையம் பள்ளிக்குசிறந்த பள்ளிக்கான விருது

    By DIN  |   Published on : 28th November 2019 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-8-27sgp02_2711chn_156

    மண்ணூா் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் மண்ணூா் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2018-19-ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் தொடக்கக் கல்வித் துறையில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதுக்கான கேடயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மாநில கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன், மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி ஆகியோா் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கிப் பாராட்டினா்.

    சங்ககிரியில்...

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொன்னம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது ஆத்தூா், தலைவாசலை அடுத்துள்ள தேவியாக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அப்பள்ளி தலைமையாசிரியா் பொன்.தனராஜூடம் வழங்கினாா் (படம்).

    விருது பெற்ற பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவியரை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி, மாவட்டக் கல்வி அலுவலா் மதன்குமாா், சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் என்.இராமசாமி ஆகியோா் பாரட்டினா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai