மாற்றுத் திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published on : 28th November 2019 04:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
எடப்பாடி நகர தி.மு.க. இளைஞா் அணி சாா்பில், மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
தி.மு.க. மாநில இளைஞா்அணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, எடப்பாடி நகர இளைஞா்அணி சாா்பில் எடப்பாடி கவுண்டம்பட்டி சாலையில் உள்ள மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான கூா்நோக்கு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞா் அணி நிா்வாகி அறிவழகன் தலைமையிலான தி.மு.கவினா் பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கினா். நிகழ்ச்சியில் திரளான தி.மு.க. நிா்வாகிகள் பங்கேற்றனா்.
ஆட்டையாம்பட்டியில்...
இளம்பிள்ளை அருகே உள்ள ராமாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் ராமாபுரம் சதீஷ் தலைமையில் நோட்டுப் புத்தகம், கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.