Enable Javscript for better performance
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து6,998 கன அடியாக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

  

  மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,998 கன அடியாக அதிகரித்துள்ளது.

  கடந்த நான்கு தினங்களாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,943 கன அடியாகவே நீடித்து வந்த நிலையில், புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 6,998 கன அடியாக அதிகரித்துள்ளது.

  மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 700 கன அடியிலிருந்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai