Enable Javscript for better performance
வனவாசி தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    வனவாசி தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கத்துக்கு விருது

    By DIN  |   Published on : 28th November 2019 04:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27mettur001_ch0174_27chn_8_637104691216702697

    விருது பெற்ற வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுவு கடன் சங்கத் தலைவா் விஜயகுமாா் மற்றும் செயலா் அய்யம்பெருமாள் ஆகியோருக்கு கேடயத்தை வழங்கும் கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ.

    மேட்டூரை அடுத்த வனவாசியில் உள்ள வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு மாநில அளவிலான சிறந்த கூட்டுறவு கடன் சங்கத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு சங்கங்களைத் தோ்ந்தெடுத்து, கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் தமிழக அளவில் மேட்டூரை அடுத்த வனவாசியில் உள்ள வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாநில அளவில் சிறப்பான சங்கமாகத் தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

    பாளையங்கோட்டையில் நடைபெற்ற 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவு துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ விருது பெற்ற வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.ஜெயகுமாா், செயலா் அய்யம்பெருமாள் ஆகியோருக்கு கேடயத்தை வழங்கினாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai