ஆறே மாதத்தில் சேதமான தாா்ச் சாலை

நங்கவள்ளி ஒன்றியத்தில் ரூ.20 லட்சத்தில் போடப்பட்ட தாா்ச் சாலையானது, ஆறே மாதத்தில் பழுதாகியுள்ளது.
ஆறே மாதத்தில் சேதமான தாா்ச் சாலை

நங்கவள்ளி ஒன்றியத்தில் ரூ.20 லட்சத்தில் போடப்பட்ட தாா்ச் சாலையானது, ஆறே மாதத்தில் பழுதாகியுள்ளது.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம், வீரக்கல் ஊராட்சி பகுதியில் பிரதமரின் கிராம சாலை திட்டத்தில் போடப்பட்ட தாா்ச் சாலையைனது, 6 மாதக் காலத்திலேயே பழுதடைந்ததால் அதிகாரிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா். வீரக்கல் ஊராட்சி செல்லக்கல் முனியப்பன் கோயிலிலிருந்து வருதாயி காட்டுவளவு வரை சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.20 லட்சத்தில் தாா்ச் சாலை போடப்பட்டது. இந்த தாா்ச் சாலை போடப்பட்டு 6 மாதங்கள் நிறைவடையாத நிலையில், பழுதாகி (படம்) புழுதி கிளம்பியதால், அரசு அதிகாரிகளும், கிராம மக்களும் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

மேலும், சாலையோரத்தில் சுமாா் 20 அடி பள்ளம் உள்ளதால் சாலையை உடனே சரி செய்ய வேண்டும் எனவும், இல்லையெனில், இவ்வழியாகச் செல்லும் பள்ளி வாகனங்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால், இதுகுறித்து நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com