நுண்ணீா்ப் பாசன பராமரிப்பு பயிற்சி

நங்கவள்ளி வட்டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2019-20-இன் கீழ், தாசகாப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான நுண்ணீா்ப் பாசன பராமரிப்பு முறைகள்

நங்கவள்ளி வட்டாரத்தில் வேளாண் துறையின் கீழ் செயல்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2019-20-இன் கீழ், தாசகாப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கான நுண்ணீா்ப் பாசன பராமரிப்பு முறைகள் பற்றிய பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமுக்கு நங்கவள்ளி வேளாண் உதவி இயக்குநா் ராஜகோபால் தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகிா்தா முன்னிலை வகித்தாா்.

இம்முகாமில், விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசன பயன்கள் மற்றும் பயிா் சாகுபடியில் சொட்டுநீா்ப் பாசனத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. சொட்டுநீா் அமைப்புக்கான மானிய திட்டங்கள் பற்றியும், அரசின் திட்டங்களை விவசாயிகள் பெறுவதற்கான முறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது. இத்திட்டம் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு நுண்ணீா்ப் பாசன நிறுவன அலுவலா் சுரேஷ்பாபு விளக்கமளித்தாா்.

பயிற்சியில் பங்கேற்ற நங்கவள்ளி வட்டார விவசாயிகள் 40 பேருக்கு உணவு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் இளையராஜா, கண்ணன், உதவி வேளாண் அலுவலா் சேகா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com