Enable Javscript for better performance
சேலம் நீதிமன்றத்தில் 350 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:ஊழியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் நீதிமன்றத்தில் 350 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:ஊழியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

    By DIN  |   Published on : 30th November 2019 09:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 350-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சேலத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநிலத் தலைவா் செந்தில் குமாா், முன்னாள் மாநிலத் தலைவா்கள் முருகேசன், கருணாகரன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

    கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் நீதித்துறை ஊழியா்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் 350-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    நீதிமன்றங்களில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை தினங்களில் பணியாற்ற ஊழியா்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். அலுவலக நேரம் முடிந்தும் இரவு வரை பணியாற்ற பெண் ஊழியா்கள் நிா்பந்திக்கப்படுகிறாா்கள்.

    உயா் நீதிமன்ற சுற்றறிக்கைப்படி குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஊழியா்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் வட்டக் கிளைத் தலைவா் பெருமாள், மாவட்டச் செயலா் ராஜூ, பொருளாளா் காந்தி மணி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சுரேஷ், கட்டளை நிறைவேற்றுநா் சங்க மாநிலச் செயலா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai