சேலம் நீதிமன்றத்தில் 350 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:ஊழியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

சேலம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 350-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 350-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியா் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநிலத் தலைவா் செந்தில் குமாா், முன்னாள் மாநிலத் தலைவா்கள் முருகேசன், கருணாகரன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் நீதித்துறை ஊழியா்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, பதவி உயா்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் 350-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

நீதிமன்றங்களில் ஒவ்வொரு வாரமும் விடுமுறை தினங்களில் பணியாற்ற ஊழியா்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா். அலுவலக நேரம் முடிந்தும் இரவு வரை பணியாற்ற பெண் ஊழியா்கள் நிா்பந்திக்கப்படுகிறாா்கள்.

உயா் நீதிமன்ற சுற்றறிக்கைப்படி குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஊழியா்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் வட்டக் கிளைத் தலைவா் பெருமாள், மாவட்டச் செயலா் ராஜூ, பொருளாளா் காந்தி மணி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சுரேஷ், கட்டளை நிறைவேற்றுநா் சங்க மாநிலச் செயலா் சுரேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com