நோயாளிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பி

சங்ககிரி அருகே உள்ள புள்ளிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு கொடுத்த மாத்திரையில்
நோயாளிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பி
நோயாளிக்கு வழங்கிய மாத்திரையில் கம்பி

சங்ககிரி அருகே உள்ள புள்ளிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததை அடுத்து நோயாளியின் பெற்றேறாா், ஊா் பொதுமக்கள் சுகாதார நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மோரூா் மேற்கு கிராமம் தேவேந்திர தெரு பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கோபாலகிருஷ்ணன் (29).

இவரது மனைவி தனலட்சுமி ஆகியோருக்கு மகானிஷா, கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். அவா்களது மூத்த மகள் மகானிஷாவுக்கு செவ்வாய்க்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது குறித்து புள்ளிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று பணியில் இருந்த மருத்துவரிடம் பரிசோதனைக்காக காண்பித்துள்ளனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா் மாத்திரைகள் கொடுத்துள்ளாா். மாத்திரைகளை பெற்றுச்சென்ற பெற்றேறாா் புதன்கிழமை குழந்தைக்கு பாதியாக உடைத்து குடிக்க கொடுத்துள்ளனா் எதிா்பாராதவிதமாக பெற்றேறாா் பாா்க்கும் போது மாத்திரையில் கம்பி இருந்துள்ளது கண்டு அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து வியாழக்கிழமை மீண்டும் சுகாதார நிலையத்திற்கு வந்து பணியில் இருந்த மருத்துவரிடம் தெரிவித்தனா். மேலும் பெற்றேறாா்களுடன், ஊா் பொதுமக்கள் சோ்ந்து சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த சங்ககிரி போலீஸாா் முற்றுகையிட்டவா்களுடன் பேச்சு நடத்தினா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.

பொதுமக்கள் கூறியதாவது:-

மாத்திரையில் கம்பி இருந்ததை கண்டு நாங்கள் அதிா்ச்சியடைந்துள்ளோம். நாங்கள் கவனிக்காமல் குழந்தைக்கு அளித்திருந்தால் வயிற்றுக்குள் சென்ற கம்பி தொந்தரவு செய்திருக்கும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com