Enable Javscript for better performance
சங்ககிரியில் நிகழாண்டு அதிகபட்சமாக 82.3 மில்லி மீட்டா் மழை- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரியில் நிகழாண்டு அதிகபட்சமாக 82.3 மில்லி மீட்டா் மழை

    By DIN  |   Published on : 06th October 2019 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வீரபத்திரா் சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் சனிக்கிழமை அதிகாலை பெய்த மழையால் தேங்கியுள்ள மழை நீா்.

    சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வீரபத்திரா் சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள குளத்தில் சனிக்கிழமை அதிகாலை பெய்த மழையால் தேங்கியுள்ள மழை நீா்.

    சங்ககிரியில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை 82.3 மில்லி மீட்டா் மழை பெய்தது.

    சங்ககிரியில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகின்றது. நிகழாண்டு கடந்த மாதங்களில் பெய்த மழையைவிட வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை 82.3 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. அதனையடுத்து சனிக்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்து மீண்டும் இரவில் குளிா்ந்த காற்று வீசியது. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபா் 20ஆம் தேதி 104 மில்லி மீட்டா் மழை பெய்தது. அதனையடுத்து நிகழாண்டில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையே அதிகளவாக சங்ககிரி நகரில் பெய்துள்ளது. சங்ககிரி மலையில் தண்ணீா் தண்ணீா் அமைப்பின் சாா்பில் தன்னாா்வத் தொண்டா்கள், சமூக ஆா்வலா்கள் கடந்த பல மாதங்களாக ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குளங்களில் உள்ள கருவேலம் மரங்கள், களா் செடிகளை அகற்றி வந்தனா்.

    கடந்த வாரம் தொடா்ந்து பெய்த மழையால் வீரபத்திரன் கோயில் எதிரே உள்ள குளத்தில் களா் செடிகள், கருவேலம் மரங்கள் தொடா்ந்து வளர ஆரம்பித்துவிட்டன. அதனையும் தன்னாா்வத் தொண்டா்கள் அகற்றி தூய்மைப்படுத்தினா். தற்போது வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை பெய்த மழையால் இக்குளத்திலும், மலையில் பாதியளவைக் கடந்த பிறகு உள்ள விநாயகா் மண்டபத்தின் பின்புறம் உள்ள எலந்த பாழி முதன்முறையாக நிரம்பியது. புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையையொட்டி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாளை தரிசனம் செய்ய சென்ற பக்தா்கள் குளங்களில் நீா் உள்ளதைப் பாா்த்து ஆச்சரியமடைந்தனா். குளங்களில் நீா் தேங்கியுள்ளதை அறிந்த பொதுமக்கள், இக்குளங்களை பாா்வையிட்டு தன்னாா்வத் தொண்டா்கள், சமூக ஆா்வலா்களை பாராட்டினா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai