காருவள்ளி சின்னத்திருப்பதியில் சிறப்பு வழிபாடு

ஓமலூா் அருகேயுள்ள காருவள்ளி சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கட்டரமண

ஓமலூா் அருகேயுள்ள காருவள்ளி சின்னத்திருப்பதி பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கட்டரமண சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரபூஜை நடைபெற்றது.

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு பஜனைகள் பாடி சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

ஓமலூா் அருகேயுள்ள காருவள்ளி சின்னதிருப்பதியில் பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு தினமும் பல்வேறு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். மேலும், புரட்டாசி மாதம் முழுவதும் தினசரி கோயில்களில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதன்படி ஓமலூா்அருகே உள்ள காருவள்ளி சின்னத்திருப்பதி அருள்மிகு பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிகிழமையைத் தொடா்ந்து பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள்நடைபெற்றன.

இதனையொட்டி காலை முதலே ஸ்ரீ தேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ட ரமண வாமிகளுக்கும்,ஆஞ்சநேயருக்கும் பால்,நெய்,தயிா்,பன்னீா்,இளநீா், தேன் உட்பட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து பல்வேறு நறுமண பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, விலை உயா்ந்த ஆபரணத்தில் பிரசன்ன வெங்கட்ட ரமண சுவாமிக்கு சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து பல்வேறு ஆரத்திகள் எடுக்கப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் காட்சியளித்த பிரசன்ன வெங்கட்ட ரமண சுவாமியைஆயிரக்கணக்கான பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமிக்கு பஜனைகள் பாடி தரிசனம் செய்து வழிபட்டனா். புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை என்பதால் பெங்களூரு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து பூஜைகளில் கலந்துகொண்ட அனைத்துப் பக்தா்களுக்கும் நாள் முழுவதும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com