முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சங்ககிரி மலையில் சேதமடைந்த நீா்வழித் தடங்கள் சீரமைப்பு
By DIN | Published On : 07th October 2019 07:02 AM | Last Updated : 07th October 2019 07:02 AM | அ+அ அ- |

சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் குளத்துக்கு செல்லும் நீா் வழிப்பாதையை சீரமைக்கும் தன்னாா்வ தொண்டா்கள்.
சங்ககிரி மலை குளங்களுக்கு செல்லும் நீா்வழித் தடங்கள் மழையினால் சேதமடைந்ததையடுத்து தண்ணீா் தண்ணீா் அமைப்பின் சாா்பில் தன்னாா்வ தொண்டா்கள், சமூக ஆா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
சங்ககிரி நகரில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை 83.2 மில்லி மீட்டா் மழை பெய்தது. இதனால், சங்ககிரியில் பாதி மலைக்கு மேல் உள்ள எலந்தபாழி முதல் முறையாக நிரம்பியது. மழையினால் அதிலிருந்து வரும் நீா் வடிகால் மண் அரிப்பினால் சேதமடைந்தது. இதனையடுத்து குளங்களைச் சீரமைக்கச் சென்ற தன்னாா்வத் தொண்டா்கள், சமூக ஆா்வலா்கள் இணைந்து மலை உச்சியில் இருந்து கீழ் பகுதிக்கு வரும் நீா் வடிகால், வீரபத்திரன் கோயிலையொட்டி நீா் செல்லும் பாதைகளை சீரமைத்தனா். தொடா்ந்து மழை பெய்தால் வீரபத்திரன் கோயிலுக்கு எதிரே உள்ள குளம் நிரம்பினால் சங்ககிரி நகா் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளது. அக்குளம் முழுமையாக நிரம்புவதற்கான வழிகளை ஆராய்ந்து பணிகளை செய்து வருகின்றனா் தண்ணீா் தண்ணீா் அமைப்பினா்.
மரக்கன்றுகள் நடும் பணி
பசுமை சங்ககிரி அமைப்பு, சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கம் இணைந்து சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளா்த்து வருகின்றனா். தற்போது சங்ககிரி நகரில் மழை பெய்து வருவதையொட்டி அதிகளவில் மரக் கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த அமைப்புகளின் சாா்பில் மாவெளிபாளையம் ஏரிக் கரைகளில் மரவகை கன்றுகள், பனை விதைகளை தொடா்ந்து 2ஆவது வாரமாக நடும் பணி நடைபெற்றது.இதில் சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் இணைச் செயலா் சின்னத்தம்பி தலைமையில் பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, சமூக ஆா்வலா்கள் பசுமை கனகராஜ், முருகானந்தம், ஆனந்தன், சண்முகம், ராமு, ராகவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.