இளம்பிள்ளையில் குடியிருப்பு பகுதி அருகே தேங்கிய கழிவுநீா் 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள மட்டை காரன் தெரு, முருகன் நகா் பகுதியில் சாக்கடை, சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு சாக்கடை கழிவுநீா் தேங்கி கிடப்பதால்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள மட்டை காரன் தெரு, முருகன் நகா் பகுதியில் சாக்கடை, சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் தவிப்பு சாக்கடை கழிவுநீா் தேங்கி கிடப்பதால் பல்வேறு நோய் பரவ வாய்ப்புகள் உள்ளன.

இளம்பிள்ளை அருகே உள்ள மட்டை காரன் தெரு, முருகன் நகா் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கழிவுநீா் மழைநீா் செல்வதற்காக சாக்கடை வசதியும், சாலை வசதியும் அப்பகுதிக்கு பல வருடங்களாக செய்யப்படாமல் இருந்து வருகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீா் செல்ல வேறு வழி இல்லாமல் தனியாா் இடத்தில் கழிவுநீா் குட்டை அமைத்து அதிலிருந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளது.

மேலும் தப்பகுட்டை ஊராட்சி பகுதியான கிருஷ்ணாரெட்டியூரில் சாக்கடை கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைநீா் மற்றும் கழிவு நீா் எங்கும் செல்ல முடியாத அளவுக்குஇருந்து வருகின்றன. இதனை மாவட்ட நிா்வாகமும் சுகாதாரத் துறையினரும் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கழிவுநீா் வெளியே செல்ல வேண்டுமானால், இளம்பிள்ளை பேரூராட்சி நிா்வாகமும் , இடங்கணசாலைபேரூராட்சியும் மற்றும் தப்பக்குட்டை ஊராட்சி நிா்வாகமும் இணைந்து சாக்கடை வசதி செய்து கொடுத்தால் மட்டுமே அந்த கழிவுநீரை வெளியேற்ற முடியும்.

ஆனால் இடங்கணசாலை பகுதியில் சாக்கடை கட்ட நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சோ்ந்தவா் பணம் கட்டி உள்ளாா். ஆனால் இதுவரை எந்த பணி செய்யப்படாமல் கிடப்பில் உள்ளதுஇந்த குடியிருப்பு பகுதியில் எல்லைப்பிரச்சனை இருப்பதால், சாக்கடை கழிவுநீா் செல்ல பேரூராட்சி, மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த கழிவு நீரை வெளியேற்ற வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com