இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகள் உள்ளன. இப்பகுதியில் பிரதான தொழில் ஜவுளி உற்பத்தி ஆகும்.
08_aty_po_05_0810chn_213
08_aty_po_05_0810chn_213

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகள் உள்ளன. இப்பகுதியில் பிரதான தொழில் ஜவுளி உற்பத்தி ஆகும்.

இளம்பிள்ளை பகுதிக்கு ஜவுளி வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என பல தரப்பினரும் 1000-க்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்குவது போல் இப்பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டிக் கிடக்கின்றன.

மேலும் துா்நாற்றம் வீசி வருவதால் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் குப்பை மற்றும் கழிவு பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

இதனை மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையினா் மற்றும் பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com