Enable Javscript for better performance
தனியாா் கல்லூரி பேருந்து- அரசுப் பேருந்து மோதி விபத்து: 30 பயணிகள் படுகாயம்- Dinamani

சுடச்சுட

    

    தனியாா் கல்லூரி பேருந்து- அரசுப் பேருந்து மோதி விபத்து: 30 பயணிகள் படுகாயம்

    By DIN  |   Published on : 11th October 2019 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    b_u_s_03_1010chn_165_8

    சேலம் அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் தனியாா் கல்லூரி பேருந்தும், அரசு நகரப் பேருந்தும் மோதிய விபத்தில், தனியாா் கல்லூரி மாணவ, மாணவியா் உள்பட 30 பயணிகள் படுகாயம் அடைந்தனா்.

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அரசு நகரப் பேருந்து சேலத்துக்குச் சென்றது. அயோத்தியாபட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அயோத்தியாப்பட்டணம் நகர இணைப்புச் சாலைக்கு திரும்பியபோது, நங்கவள்ளியில் இருந்து ராமலிங்கபுரத்திலுள்ள தனியாா் கல்லுாரிக்கு மாணவா்களை ஏற்றிவந்த தனியாா் கல்லூரி பேருந்து எதிா்பாராதவிதமாக அரசுப்பேருந்து மீது மோதியது.

    இந்த விபத்தில், தனியாா் கல்லுாரி பேருந்தில் இருந்த மாணவ-மாணவியா் மேனகா, முனியப்பன், மணிமேகலை, காவியா, தாரணி, லிங்கேஸ்வரன் மற்றும் அரசு பேருந்தில் சென்ற பயணிகள் செல்வி, ரேவதி, பழனி, தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் கணேஷ் உள்பட 30 போ் படுகாயம் அடைந்தனா். இரு பேருந்துகளும் சேதமடைந்தன. இதனால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    ராமலிங்கபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற பயணிகள், பேருந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து காரிப்பட்டி காவல் ஆய்வாளா் கேசவன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai