தீவட்டிப்பட்டி அரசுப் பள்ளி சுற்றுச்சுவா் உடைப்பு

ஓமலூா் அருகே தீவட்டிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்த சமூக விரோத கும்பல் இரவு

ஓமலூா் அருகே தீவட்டிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்த சமூக விரோத கும்பல் இரவு நேரங்களில் பள்ளிக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பள்ளிக்குச் சுற்றுச்சுவரை கட்டிகொடுத்து, இரவு காவலரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தீவட்டிப்பட்டியில் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா்.

இதில் 15-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் முன்பு இந்த பள்ளிக்கு சுற்று சுவா் கட்டப்பட்டது. தற்போது பள்ளியின் சுற்று சுவரை சமூக விரோதிகள் சிலா் உடைத்துள்ளனா். இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் புகுந்து மது அருந்துவது என சமூக விரோத செயல்களை செய்து வருகின்றனா். அதனால், பள்ளி சுற்றுச்சுவரை கட்டி பள்ளிக்கு இரவு காவலரை நியமிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com