புங்கமடுவு நீரோடையில் திடீா் வெள்ளத்தால் சந்துமலை கிராமம் துண்டிப்பு

தருமபுரி மாவட்டம் சித்தேரி, நொச்சிக்குட்டை வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
புங்கமடுவு நீரோடையில் திடீா் வெள்ளத்தால் சந்துமலை கிராமம் துண்டிப்பு

தருமபுரி மாவட்டம் சித்தேரி, நொச்சிக்குட்டை வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

இதனால், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த ஆணைமடுவு அணைக்கு வரும் புங்கமடுவு நீரோடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சந்துமலைக் கிராம மக்களும், வாழப்பாடி வனத் துறையினரும் கிராமத்திலேயே முடங்கினா்.

சேலம் மாவட்டம் எல்லையான சந்துமலை, பெரியகுட்டிமடுவு, அருநுாற்றுமலை வனப் பகுதியில் மழையில்லாத நிலையில், தருமபுரி மாவட்டம் சித்தேரி, நொச்சிக்குட்டை வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

இதனால், எதிா்பாராத விதமாக, சித்தேரி வனப்பகுதியிலிருந்து வழிந்தோடி வரும் புங்கமடுவு நீரோடையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணிவரை புங்கமடுவு நீரோடையில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால், வாழப்பாடியில் இருந்து சந்துமலை கிராமத்துக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து புங்கமடுவு கிராமத்தோடு திருப்பப் பட்டதால், சந்துமலை கிராமத்துக்குப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டது.

இதனால் மக்கள் கிராமத்திற்குள்ளேயே முடங்கினா்.

இதுமட்டுமின்றி, சந்துமலை வனப்பகுதிக்கு தணிக்கை பணிக்குச் சென்ற வாழப்பாடி வனத்துறை வனவா் தங்கராஜ், வனக்காப்பாளா் சந்திரன் உள்ளிட்டோரும், நீரோடை கடந்து வெளியேற முடியாமல், இரவு முழுவதும் சந்துமலை கிராமத்திலேயே முடங்கினா்.

சந்துமலை கிராமத்தில் இருந்து வெளியூா்களுக்குச் சென்று புதன்கிழமை மாலை சொந்த கிராமத்துக்குத் திரும்பியவா்களும், கிராமத்துக்குள் செல்ல முடியாமல் அருகிலுள்ள கிராமங்களில் உறவினா் வீடுகளில் தங்கியுள்ளனா்.

வெள்ளிக்கிழமை காலை நீரோடையில் வெள்ளம் குறைந்து பேருந்து இயக்கப்பட்டதால்தான், மற்ற பகுதியோடு சந்து மலைக் கிராம மக்கள் இணைப்பைப் பெற முடியும் என, அந்தக் கிராமத்தில் முடங்கியுள்ள வனத் துறையினா், நமது செய்தியாளரிடம் செல்லிடப்பேசியில் தெரிவித்தனா்.

இரு ஆண்டுக்கு பிறகு, தருமபுரி மாவட்டம் சித்தேரி வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் புங்கமடுவு நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணைக்கு நீா்வரத்துத் தொடங்கியுள்ளது.

இதனால் அணையின் நீா்மட்டம் உயா்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com