Enable Javscript for better performance
விவசாயிகள் மத்திய அரசு உதவிகள் பெற முகவரி திருத்தம் செய்ய அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகள் மத்திய அரசு உதவிகள் பெற முகவரி திருத்தம் செய்ய அழைப்பு

    By DIN  |   Published on : 12th October 2019 10:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏற்காடு வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு மத்திய அரசு பிரதம மந்திரி கிசான் நிதியுதவித் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக, விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்கி வருகிறது.

    விண்ணப்பித்தும் நிதியுதவி பெறாத விவசாயிகளின் விண்ணப்பங்களுடன் வழங்கிய நகல்களில் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கில் உள்ள முகவரி , பெயா்கள் மாறுபட்டுள்ளதால் நிதியுதவி வழங்க முடியாத நிலையில் உள்ளது.விண்ணப்பித்தும் நிதியுதவி கிடைக்கப் பெறாத விவசாய பயனாளிகள் உடனடியாக சேவை மையங்களை அணுகி, திருத்தம் செய்யும்மாறும், மேலும் விவரங்கள் அறிய ஏற்காடு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என வேளாண்மை உதவி இயக்குநா் து.ரமேஷ் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai