அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைக்க உத்தரவு

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க சேலம்

ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா். அதற்கான அறிக்கையை தலைமை ஆசிரியா்கள் விரைவில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 400-க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் உள்ளன. அங்கு சமைக்கப்படும் உணவு, முட்டை உள்ளிட்டவை மாணவா்களுக்கு மதிய உணவாக வழங்கப்படுகின்றன. அதை ஒட்டிய பகுதிகளில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, அவா் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றிக்கையில் சத்துணவு மையமுள்ள பள்ளிகளில், காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும். செடி, மரக்கன்றுகளுக்கு, வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதில், நாட்டு வகை கத்திரி, வெண்டை, கொத்தவரை, மிளகாய், முள்ளங்கி, தக்காளி, கீரை வகைகள், பப்பாளி, முருங்கை, எலுமிச்சை, சப்போட்டா, கருவேப்பிலை உள்ளிட்டவற்றை நட்டு பராமரிக்க வேண்டும். சத்துணவு மையங்களில், அரிசி, பருப்பை சுத்தப்படுத்தும் நீா், மாணவா்கள் கைகழுவும் நீரை, இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தோட்டப் பராமரிப்பு குறித்து, மாணவா்களுக்கு, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை முறையில் பராமரிக்க வேண்டும். தற்போது, மழைக்காலம் என்பதால், தோட்டம் உருவாக்க, சிறப்பான தருணம் ஆகும். மேலும், தோட்டம் அமைத்தது, அதற்கான விழிப்புணா்வை மாணவா்களுக்கு வழங்கியது குறித்த அறிக்கைகளை தலைமை ஆசிரியா்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com