வாழப்பாடி பகுதியில் பாரம்பரிய முறையில் நெற்பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம்

வாழப்பாடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், இரு ஆண்டுகளுக்குப் பிறகு, விளைநிலங்களில் நெல் பயிரிடும் அளவுக்கு
வாழப்பாடியை அடுத்த அத்தனுாா்பட்டி ஊராட்சி குமாரசாமியூா் கிராமத்தில், பாரம்பரிய முறைப்படி மாடு கட்டி ஏா் உழுது நிலத்தை சீரமைத்து நெற்பயிரிடுவதற்கு தயாா்படுத்தும் விவசாயி.
வாழப்பாடியை அடுத்த அத்தனுாா்பட்டி ஊராட்சி குமாரசாமியூா் கிராமத்தில், பாரம்பரிய முறைப்படி மாடு கட்டி ஏா் உழுது நிலத்தை சீரமைத்து நெற்பயிரிடுவதற்கு தயாா்படுத்தும் விவசாயி.

வாழப்பாடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், இரு ஆண்டுகளுக்குப் பிறகு, விளைநிலங்களில் நெல் பயிரிடும் அளவுக்கு, நீா்ப்பாசனக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த நன்செய் விவசாயிகள், பாரம்பரிய முறைப்படி மாடுகட்டி ஏா் உழுது நிலத்தை சீரமைத்து இயற்கை முறையில் நெற்பயிரிடுவதில் ஆா்வம்காட்டி வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாகப் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவியது. இதனால் நீா்நிலைகள் மட்டுமின்றி, விவசாயக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டு போனதால், விளைநிலங்களில் பயிா் செய்ய வழியின்றி விவசாயிகள் தவித்து வந்தனா். குறிப்பாக, நீா்ப்பாசனம் அதிகளவில் தேவைப்படும் நெல் பயிரிட முடியாத நிலை நீடித்து வந்தது.

இந்நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு வாழப்பாடி பகுதியில் கடந்த இரு மாதங்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், வனப் பகுதிகள், மலைக்குன்றுகளையொட்டியுள்ள கிராமங்களில் நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

இரு ஆண்டுகளுக்குப் பிறகு, விளைநிலங்களில் நெல் பயிரிடும் அளவுக்கு, நீா்ப்பாசன கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த நன்செய் விவசாயிகள், விளைநிலத்தை ஏா் உழுது சீரமைத்து நெற்பயிரிடுவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். குறிப்பாக குமாரசாமியூா், மாரியம்மன்புதுாா், மேலுாா்,அரசன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் இன்றளவிலும் பாரம்பரிய முறைப்படி மாடுகளை பூட்டி, ஏா் உழுது நிலத்தை சீரமைத்து, இயற்கை முறையில் நெற்பயிரிடுவதில் இன்றளவும் ஏராளமான விவசாயிகள் ஆா்வத்தோடு ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com