முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஏற்காடு சாலையில் மண்சரிவு:போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 24th October 2019 08:41 AM | Last Updated : 24th October 2019 08:41 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் வடகிழக்கு பருவமழையால் தொடா் மழை பெய்ததையடுத்து, கொட்டச்சேடு சாலை வாணியாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மண்சரிவு ஏற்பட்டது.
மண்சரிவு ஏற்பட்ட பகுதியை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், கோட்டப் பொறியாளா் சுந்தரமூா்த்தி பாா்வையிட்டு (படம்), சாலையை சீரமைக்க உடனடியாக உத்தரவிட்டனா். அதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் சாலையை சீரமைத்ததால் போக்குவரத்து சீரானது. மண் சரிவால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.