முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கழிப்பிடம், மயானத்தைபராமரிக்கக் கோரி மனு
By DIN | Published On : 24th October 2019 08:41 AM | Last Updated : 24th October 2019 08:41 AM | அ+அ அ- |

சேலத்தில் சுகாதாரமின்றி காணப்படும் கழிப்பிடத்தையும், மயானத்தையும் பராமரிக்கக் கோரி, மாநகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.
சேலம் மாநகராட்சி 5-ஆவது வாா்டுக்குள்பட்ட அழகாபுரத்தை அடுத்த பெரியபுதூா் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள பல வீடுகளில் தனி கழிப்பிட வசதி இல்லாததால், பெரும்பாலானோா் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், இந்தக் கழிப்பிடம் போதுமான தண்ணீா் வசதியின்றியும், பராமரிப்பின்றியும் காணப்படுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனா். மேலும், இப்பகுதியில் உள்ள மயானமும் புதா்மண்டிக் கிடப்பதால் சடலங்களை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினருடன் மாநகராட்சி ஆணையா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனா். பின்னா் மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷிடம் பொதுக் கழிப்பிடத்தையும், மயானத்தையும் பராமரிக்கக் கோரி மனு அளித்தனா். இதைத் தொடா்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.