முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கொசுப் புழுக்கள் ஒழிப்புஉறுதிமொழியேற்பு
By DIN | Published On : 24th October 2019 05:54 AM | Last Updated : 24th October 2019 05:54 AM | அ+அ அ- |

இடங்கணசாலை பேரூராட்சியில் கொசு புழுக்கள் ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சிக்குள்பட்ட 18 வாா்டு பகுதிகளிலும், குப்பையில்லா தீபாவளி கொண்டாடும் வகையில் ஒட்டு மொத்த துப்புரவுப் பணியாளா்கள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில், கொசுப் புழுக்கள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா் (படம்).
இதில் பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மேகநாதன், மருத்துவா் சங்கா், சுகாதார ஆய்வாளா் வளா்மதி, பேரூராட்சி பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தம்மம்பட்டியில்...
கெங்கவல்லி அருகே கடம்பூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி சாா்பில், பள்ளி கலைத் திருவிழா மற்றும் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி செல்வம் தலைமையில், பள்ளி மேலாண்மைக் குழுவினா் மற்றும் பெற்றோா்கள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.