முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சோனா கல்லூரியில்திறன் மேம்பாட்டுப் போட்டிகள்
By DIN | Published On : 24th October 2019 08:40 AM | Last Updated : 24th October 2019 08:40 AM | அ+அ அ- |

சேலம் சோனா கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டிகள் மற்றும் கலை விழாவில் பேசும் சோனா கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா.
சேலம் சோனா கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் போட்டிகள் மற்றும் ‘சோனா பிரிஸ்’ கலை விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட விழாவில், சேலம் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் இருந்து சுமாா் 1,500 மாணவா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், இளம் விஞ்ஞானி, இளம் கண்டுபிடிப்பாளா், பட்டிமன்றம், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், புகைப்படம் எடுத்தல், விநாடி-வினா, பலகுரல், நடனம் (குழு மற்றும் தனி), வேடிக்கை விளையாட்டுகள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் திறமையானவா்களை தோ்ந்தெடுத்து அவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கணேஷ்மூா்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், சோனா கல்விக் குழுமத்தின் முதல்வா்கள் காா்த்திகேயன், காதா்நவாஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாவின் ஒருங்கிணைப்பாளா்கள் பேராசிரியா் ரேணுகா, சத்யபாமா, செந்தில்வடிவு, தினேஷ் மற்றும் கல்லூரி மாணவா்கள் செய்திருந்தனா்.