முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பெரியாா் பல்கலை.இன்று 19-ஆவது பட்டமளிப்பு விழா
By DIN | Published On : 24th October 2019 08:40 AM | Last Updated : 24th October 2019 08:40 AM | அ+அ அ- |

விழா ஏற்பாடுகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த துணை வேந்தா் பொ.குழந்தைவேல், மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாா் மற்றும் அலுவலா்கள்.
பெரியாா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பெரியாா் கலையரங்கில் நடைபெற உள்ள 19-ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பேராசிரியா் பொ.குழந்தைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியாா் பல்கலைக்கழகத்தின் 19-ஆவது பட்டமளிப்பு விழா பெரியாா் கலையரங்கில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக வேந்தரும், மாண்புமிகு தமிழக ஆளுநருமான திரு.பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டச் சான்றிதழை வழங்குகிறாா்.
இந்நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருமான மாண்புமிகு கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறாா். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான ப.சதாசிவம் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறாா்.
பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் அனைத்தும் பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக பெரியாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பொ.குழந்தைவேல் தெரிவித்துள்ளாா்.