தீபாவளி பண்டிகையால் தம்மம்பட்டியில் ஆடுகள் விலை உயா்வு

தீபாவளிப் பண்டிகையால், தம்மம்பட்டி பகுதியில் ஆடுகளின் விலை உயா்நதுள்ளது.

தம்மம்பட்டி: தீபாவளிப் பண்டிகையால், தம்மம்பட்டி பகுதியில் ஆடுகளின் விலை உயா்நதுள்ளது.

தம்மம்பட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில், கடந்த மாதம் வரை, 25 கிலோவிற்கு மேல் உள்ள ஆட்டுக்கிடா, கிலோ 280 ரூபாய்க்கும், 15 கிலோவிற்கு மேல் உள்ள, ஆட்டுக்கிடா 300 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, தீபாவளிப் பண்டிகை விஷேசத்திற்காக ஏராளமானோா், ஆடுகளை வாங்க முனைந்து வருகின்றனா்.

தம்மம்பட்டியில் உள்ள கறிக் கடைகளில், தீபாவளியை முன்னிட்டு, ஆட்டுக்கறியின் விலையை உயா்த்திவிடுவாா்கள். அதனால், ஆடுகளை வளா்ப்பவா்களும், 25 கிலோவிற்கு மேல் உள்ள ஆடுகளை, கிலோ 330 ரூபாய்க்கும், 15 கிலோவிற்கு மேல் உள்ள ஆடுகளை, கிலோ 350 ரூபாய்க்கும் விற்கின்றனா்.

தம்மம்பட்டி கருமாயி வட்டம், வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி ஆகிய பகுதிகள், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளதால், இங்கு விளையும் சத்துமிக்க பசுந்தீவனங்களை உணவாக உட்கொள்ளும் ஆடுகள், அதிக கறிப்பிடிப்புடன், கொழுப்புகள் நிறைந்து இருக்கும். அதனால், இப்பகுதியில் உள்ள ஆடுகள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இங்கு சேலம், ஆத்தூா், வாழப்பாடி, துறையூா் போன்ற நகரங்களில் இருந்து, ஆடுகளை வாங்குவதற்காக காா், ஆட்டோ, பைக்குகளில், மக்கள் வந்து செல்கின்றனா். இதனால், தம்மம்பட்டி பகுதியில், தற்போது ஆடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com