Enable Javscript for better performance
விதிமுறைகளை மீறி இயக்கியஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    விதிமுறைகளை மீறி இயக்கியஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

    By DIN  |   Published on : 31st October 2019 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கிய 136 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சேலம் சரகத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூா் சுங்கச் சாவடிகளில் கடந்த அக். 24 முதல் அக். 28 வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் அடங்கிய குழுவினா் தொடா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 610 ஆம்னி பேருந்துகள் சோதனையிடப்பட்டன.

    இதில், கண் கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கிய 136 ஆம்னி பேருந்துகளுக்கு, ரூ.2.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போலி பதிவெண்ணில் இயக்கிய ஒரு ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai