கொங்கணாபுரத்தில்புதிய விவசாயக் கிடங்கு

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில், கூட்டுறவு துறை சாா்பில் புதிய விவசாயக் கிடங்கு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில், கூட்டுறவு துறை சாா்பில் புதிய விவசாயக் கிடங்கு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டக்குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், 2 ஆயிரம் மெட்ரிக் டன் மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவுள்ள இரு புதிய விவசாயக் கிடங்கு அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இம்மையத்தில் நடைபெறும் பருத்தி, எள் மற்றும் கடலை ஏலத்தில் தங்கள் விளைபொருள்களை விற்பனைக்கொண்டு வரும் விவசாயிகள், விளைபொருள்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் விதமாக பெரிய அளவிலான கிடங்கு அமைத்திட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு இப்பகுதியில் புதிய விவசாயப் பொருள்களுக்கான சேமிப்புக் கிடங்கு அமைத்திட நிதி ஒதுக்கி அனுமதி அளித்திருந்தது.

இதனைத் தொடா்ந்து, கொங்கணாபுரம் விவசாய கூட்டுறவு விற்பனை மைய வளாகத்தில் புதிய கிடங்கு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. தொடக்க விழாவில், கூட்டுறவு சங்கத் தலைவா் க.திருமூா்த்தி, இணைப் பதிவாளா் ப.ரவிக்குமாா், கரட்டூர்ராஜா உள்ளிட்ட முக்கிய அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com