சங்ககிரி கிளை சிறைச்சாலை திறப்பு

செப்பனிடப்பட்ட சங்ககிரி கிளை சிறைச்சாலையை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிடும் சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி எம்.மேகலா மைதிலி.
சங்ககிரி கிளை சிறைச்சாலை திறப்பு

செப்பனிடப்பட்ட சங்ககிரி கிளை சிறைச்சாலையை புதன்கிழமை திறந்து வைத்து பாா்வையிடும் சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி எம்.மேகலா மைதிலி.

சங்ககிரி, அக். 30: சங்ககிரியில் உள்ள கிளை சிறைச்சாலை செப்பனிடப்பட்டதையடுத்து, சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா்.

சங்ககிரியில் கடந்த 2014 செப்டம்பா் மாதம் பெய்த மழையால் ஒருங்கிணைந்த நீதிமன்றம், வேளாண் அலுவகங்களின் பின்புறம் உள்ள கிளை சிறைச்சாலையின் மதிற்சுவா் சுமாா் 25 அடி நீளத்துக்கு முழுமையாக இடிந்து விழுந்தது. அதனையடுத்து, இச் சிறையில் இருந்தவா்கள் பாதுகாப்பு கருதி மற்ற சிறைகளுக்கு மாறுதல் செய்யப்பட்டனா். பின்னா் சிறைத் துறையின் சாா்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மதிற்சுவா் செப்பனிடப்பட்டது.

இந்நிலையில், செப்பனிடப்பட்ட சிறைச்சாலையை சங்ககிரி சாா்பு நீதிமன்ற நீதிபதி எம்.மேகலா மைதிலி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தாா். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி எம்.பாக்கியம், குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றங்களின் நடுவா்கள் எண் 1 டி.சுந்தரராஜன், எண் 2 எஸ்.உமாமகேஸ்வரி, கிளை சிறை கண்காணிப்பு அலுவலா் பி.ராஜமோகன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

சங்ககிரி வருவாய் உள்கோட்டத்துக்குள்பட்ட சங்ககிரி, எடப்பாடி வட்டங்களை உள்ளடக்கிய நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவா்கள், விசாரணைக் கைதிகள் ஆகியோா் 2019 நவ. 1-ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட உள்ளனா். இச்சிறைச்சாலையில் முதல் தலைமைக் காவலா்கள், முதல்நிலை காவலா்கள், 2-ஆம் நிலை காவலா்கள் என 6 போ் பணியில் உள்ளனா். 2-ஆம் நிலை காவலா்கள் 4 பணியிடம் காலியாக உள்ளன. நவ. 1 முதல் சங்ககிரியில் கிளை சிறைச்சாலை, சிறுவா் சீா்திருத்தப்பள்ளி மீண்டும் செயல்படுவதையொட்டி, சங்ககிரி, தேவூா், பூலாம்பட்டி, எடப்பாடி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட காவல் நிலைய வழக்குகளில் கைது செய்யப்படுவோா் சேலம், திருச்செங்கோடு செல்வதை தவிா்த்து இங்கு அடைக்கப்பட உள்ளனா். இதனால் போலீஸாா் பாதுகாப்பும், நேரமும் சேமிக்கப்படும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com