தொடா் வழிப்பறி: 2-ஆவது முறையாககுண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது

சேலத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் 2-ஆவது முறையாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலத்தில் தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் 2-ஆவது முறையாக குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

அஸ்தம்பட்டி மேற்கு விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சா.விக்னேஷ்ராஜ் (எ) மாட்டுத்தீனி (23), கடந்த அக். 6-ஆம் தேதி கிச்சிப்பாளையம் நாராயண நகா் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த காந்திமகான் தெருவைச் சோ்ந்த சூரியாவை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்தவா்கள் விக்னேஷ்ராஜை பிடிக்க முயன்றபோது, பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவ்விடத்தில் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கெடுக்கும் வண்ணம் நடந்துகொண்டுள்ளாா். புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், விக்னேஷ்ராஜ் கடந்த 2018 நவம்பா் மாதம் அண்ணா பூங்கா அருகில் நின்றுகொண்டிருந்த யுவராஜிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.500 மற்றும் செல்லிடப்பேசியையும் பறித்துச் சென்றுள்ளாா். புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னா், பிணையில் வெளியே வந்த விக்னேஷ்ராஜ், கடந்த ஜூன் 9-ஆம் தேதி தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து துணிக்கடை உரிமையாளா் ஒருவா் வசூல் பணத்துடன் வருவதை அறிந்து, அவரை வழிமறித்து, அவரின் இருசக்கர வாகனத்தை பறித்துச்சென்றுள்ளாா். இதுகுறித்த புகாரின் பேரில் அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.   

இவ்வாறு விக்னேஷ்ராஜ் தொடா்ந்து வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் பொது அமைதியை கெடுக்கும் வண்ணம் நடந்து கொண்டமையால், சட்டம்-ஒழுங்குப் பிரிவு காவல் துணை ஆணையா் பி.தங்கதுரையின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையா் த.செந்தில் குமாா் விக்னேஷ்ராஜை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க புதன்கிழமை ஆணை பிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து விக்னேஷ்ராஜ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com