Enable Javscript for better performance
மதிமுக சேலம் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரியில் மதிமுக சேலம் மேற்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் என்.மகேந்திரவர்மன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கோபால்ராஜ், மத்திய மாவட்டப் பொறுப்பாளர் அ.ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்ககிரி ஒன்றியச் செயலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
     மதிமுக அமைப்புச் செயலர் வந்தியதேவன் கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும், வரும் உள்ளாட்சி, சட்டப்பேரவைத் தேர்தல்களில் பணியாற்றுவது குறித்தும் விளக்கிக் கூறினார். இதில், ஒன்றியச் செயலர்கள், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சங்ககிரி நகரச் செயலர் எம்.கதிர்வேல் நன்றி கூறினார். சங்ககிரி அரசு மருத்துவமனையில் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சங்ககிரி ஆர்.எஸ்., குப்பனூர் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்தினை தவிர்க்கவும் மேம்பாலங்கள் கட்ட வேண்டும், சங்ககிரி மலைக்கோட்டை தொல்பொருள் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் அதன் பராமரிப்புப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நுழைவு வாயிலில் அறிவிப்புப் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai