சுடச்சுட

  

  ரயில் நிலையங்களில் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற இந்திய ரயில்வேயின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப சேலம் ரயில் நிலையத்தில் தூய்மை பிரசாரம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
   சேலம் ரயில் நிலையத்தில் தொடக்கி வைக்கப்பட்ட தூய்மை பிரசாரம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடையும்.
   நிகழ்ச்சியில் ரயில்வே ஊழியர்கள், பயணிகள் என அனைவரும், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியைப் பயன்படுத்த மாட்டோம் என தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
   நிகழ்ச்சியில் சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன், முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் முகுந்தன் உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட நெகிழிப் பொருள்கள் விதிகளுக்கு உட்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai