சுடச்சுட

  

  மகாகவி பாரதியாரின் 98 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சேலத்தில் பல்வேறு அமைப்பினர் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
   சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரில் உள்ள பாரதியார் சிலைக்கு பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவு சார்பில் மாநில செயலாளர் பழனிசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
   இதில் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத், ராமசாமி, குப்புசாமி, முருகேசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் தலைவர் சங்கர், தேசிய சமூக இலக்கியப் பேரவை சார்பில் தாரை குமரவேல், காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் கோவை சுந்தரம், பாரதியார் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் தேவிகா ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai