சுடச்சுட

  

  வெளிநாடு சென்று திரும்பிய முதல்வருக்கு பாமக, பாஜக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

  By DIN  |   Published on : 12th September 2019 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சேலம் திரும்பிய முதல்வரை பா.ம.க, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
   தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபை ஆகிய நாடுகளில் கடந்த 10 நாள்களாக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்தடைந்தார். அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் சுமார் ரூ.8,835 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
   இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் சேலம் வந்தார். வெளிநாடுகளுக்கு சென்று தமிழகம் திரும்பிய முதல்வரை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே புதன்கிழமை காலை பா.ஜ.க. மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
   பின்னர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டார்.
   அதைத் தொடர்ந்து குட்டப்பட்டி மாதநாயக்கன்பட்டிக்கு சென்ற முதல்வர், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி ஆர்.நாராயணன் (97) மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
   பின்னர் புதன்கிழமை மாலை முதல்வர் கோவை சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai