மழை நீர் தேங்காமல் சுற்றுப்புறங்களை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்: திட்ட இயக்குநர் வலியுறுத்தல்

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் மழை நீர் தேங்காமல் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்று திட்ட இயக்குநர் அருள்ஜோதி அரசன் வலியுறுத்தினார்.
 ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இப்பணிகளை சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் என்.அருள்ஜோதி அரசன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 ஓமலூர் அருகேயுள்ள தாத்தியம்பட்டி பகுதியில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், பொதுமக்களிடம் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், வீட்டின் அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மழை நீர் தேங்கினால் அதிலிருந்து டெங்கு கொசு உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தாமதமின்றி சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
 ஆய்வின்போது, ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com