சுடச்சுட

  

  "இந்திய அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 1.16 மில்லியனாக உயர்வு'

  By DIN  |   Published on : 13th September 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய அளவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 1.16 மில்லியனாக உயர்ந்துள்ள நிலையில், உணவு முறையை மேம்படுத்துவதன் மூலம் புற்றுநோயை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ. குழந்தைவேல் தெரிவித்தார்.
   புற்றுநோய்க்கான மருத்துவ ஊட்டச்சத்து சிகிச்சை என்ற தலைப்பிலான இருநாள் கருத்தரங்கம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறை சார்பில் வியாழக்கிழமை தொடங்கியது.
   கருத்தரங்கைத் துவக்கி வைத்து உரை ஆற்றிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொ. குழந்தைவேல் (படம்) "உலக சுகாதார அமைப்பின் தகவல்படி 2018 ஆம் ஆண்டு உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் ஆக உள்ளது. இதில் இந்திய புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 1.16 மில்லியன் ஆக உள்ளது. வாய் (16.1 சதவீதம்) மற்றும் நுரையீரல் (8.5 சதவீதம்) புற்றுநோயால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 27.7 சதவீதம், 16.5 சதவீதம் பெண்கள் மார்பகம் மற்றும் கர்ப்பப் பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் உணவு முறையை மேம்படுத்துவன் மூலம் தவிர்க்க இயலும். இதில் மருத்துவம் சார் உணவூட்டம் மற்றும் உணவு விதிமுறை பயிலும் மாணவர்களின் பங்கு அதிகம் என்றார் அவர்.
   பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனை தலைமை உணவு முறையாளர் தாப்னேபாலன் பேசியதாவது:
   தவறான உணவு முறை, உடல் உழைப்பின்மை, மது, புகையிலை ஆகியவை புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளாக உள்ளன. குடல் சார்ந்த புற்றுநோய்களில் உணவு பழக்க வழக்கங்களின் பங்கு அதிகம். மாமிச உணவு வகைகள், திட கொழுப்பு வகைகளைக் குறைப்பது, மற்றும் நிறமிகள் அதிகமுள்ள காய்கறி, பழங்கள் அதிகம் உள்கொள்வதும் , நடைப்பயிற்சி மேற்கொள்வதும் புற்றுநோயைத் தடுப்பதில் அதிக பங்களிப்பதாகத் தெரிவித்தார்.
   நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் துறைத் தலைவர் பேராசிரியர் பி. நாஸ்னி வரவேற்றார். இணைப் பேராசிரியர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai