சுடச்சுட

    

    சேலம் மாவட்டத்தில் 471 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
     பருவ மழை தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை இரவும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நெத்திமேடு, சத்திரம், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.
     இதேபோல், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
     இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
     மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
     எடப்பாடி-66, ஓமலூர்-65.4, காடையாம்பட்டி-45, சேலம்-43.6, சங்ககிரி-43.3, கரியகோவில்-42, ஆணைமடுவு-39, ஏற்காடு-29, மேட்டூர்-28.2, வாழப்பாடி-18, பெத்தநாயக்கன்பாளையம்-15, வீரகனூர்-14, ஆத்தூர்-10.4, தம்மம்பட்டி-7.2, கெங்கவல்லி-5.4 என மொத்தம் 471.5 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது.
     சங்ககிரியில் 43.3 மில்லி மீட்டர் மழை: சங்ககிரி நகரில் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை காலை வரை 43.3 மில்லி மீட்டர் மழை பெய்தது.
     புதன்கிழமை இரவு தொடங்கிய மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. பின்னர் வியாழக்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்தது.
     அதையடுத்து மாலையில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. மழை பெய்து கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டன. பள்ளி வேலை நேரம் முடிந்த பின் வீட்டிற்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்த படி பேருந்து நிலையத்துக்குச் சென்றனர்.
     மாலையில் திடீரென மழை பெய்ததால் சங்ககிரி பழைய பேருந்து நிலையம், எடப்பாடி, திருச்செங்கோடு, பவானி, ஈரோடு, சேலம் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் ஒதுங்கி நிற்பதற்கு நிழற்குடை இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினர். வியாழக்கிழமை முழுவதும் சங்ககிரி நகரில் குளிர்ந்த காற்று வீசியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai