சுடச்சுட

  

  மேட்டூர் அணை நீர் திறப்பு 35 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு

  By DIN  |   Published on : 13th September 2019 10:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
   கர்நாடக மாநிலத்தில், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து நிரம்பியது.
   அணை நிரம்பிய பிறகும் நீர்வரத்துத் தொடர்ந்து இருந்ததால் மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 75 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. இதனால், கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டது. கர்நாடக அணைகளின் நீர்திறப்புக் குறைக்கப்பட்டதால் வியாழக்கிழமை, மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 40 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120. 63 அடியாகவும், நீர் இருப்பு 94.47 டி.எம்.சி. யாகவும் இருந்தது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai