இளம்பிள்ளை ஏரி மதகு கதவு உடைந்தது: வீடுகளில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி 

இளம்பிள்ளை ஏரி மதகு கதவு உடைந்தது: வீடுகளில் நீர் புகுந்ததால் மக்கள் அவதி 

இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளன.
 இந்த ஏரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2.26 கோடி மதிப்பில் திரவக் கழிவுத் திட்டத்தின் கீழ் பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், பணி முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளன. தற்சமயம் 12-ஆம் தேதி மாலையில் பெய்த கனமழையால் அதிக அளவு தண்ணீர் வந்தது.
 இதில், மதகு கதவு பராமரிப்பு இல்லாததால் உடைந்து பெருமாகவுண்டம்பட்டி ஊர் பகுதியில் கரடிகுண்டு தெரு, காளியம்மன் கோவில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் கலந்து 200-க்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் பொதுமக்கள் வீட்டுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
 மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த மழைநீர் கழிவுநீர் கலந்து வருவதால் பாம்புகளும் விஷப்பூச்சிகளும் அதிக அளவில் வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.
 இதையடுத்து தகவல் கிடைத்ததும் சேலம் தெற்கு வட்டாட்சியர் ஆர்த்தி தலைமையில் இளம்பிள்ளை வி.ஏ.ஓ செல்வம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களும், போலீஸாரும் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். அப்போது அப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
 இளம்பிள்ளை ஏரியிலிருந்து நடுவனேரி ஏரிக்குச் செல்லும் ஓடையானது முற்றிலும் அடைக்கப்பட்டு வருவதால் மழைநீர் தாழ்வான பகுதியில் செல்கின்றன. எனவும் இதனை தீவிரப்படுத்தி அகலப்படுத்த மாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். சேலம் தெற்கு வட்டாட்சியர் ஆர்த்தி தலைமையில் பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com