காவிரி கதவணை நீர்த்தேக்கங்களில் மின் உற்பத்தி அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக காவிரி ஆற்றில் தொடர் நீர்த் திறந்து விடப்பட்டுளள்ள நிலையில் காவிரி கதவணை நீர்த் தேக்க மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக காவிரி ஆற்றில் தொடர் நீர்த் திறந்து விடப்பட்டுளள்ள நிலையில் காவிரி கதவணை நீர்த் தேக்க மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
 மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரைக் கொண்டு செக்கானூர்,
 நெருஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவிரி கதவணைகளில் நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கதவணை நீர்த்தேக்க மின் உற்பத்தி நிலையங்களிலும் தலா 30 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டவையாகும். அவ்வப்போது காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவை பொருத்து மின் உற்பத்தி செய்யப்படும்.
 இந்த நிலையில் அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாசனத்துக்கும், நீர் வரத்துக்கும் ஏற்ப கூடுதல் நீர் அணையிலிருந்து திறக்கப்படுவதால் ஆற்றில் காவிரி நீர் அதிகம் வந்துகொண்டிருக்கிறது.
 இதனால் காவிரி கதவணை நீர் மின் நிலையங்களில் கூடுதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பூலாம்பட்டி கதவணை நீர் மின்நிலையத் தொழில்நுட்பப் பணியாளர்கள் கூறியதாவது:
 கடந்த சில வாரங்களாகவே பூலாம்பட்டி கதவணை நீர் மின் நிலையத்தில் எதிர்பார்த்த அளவு மின் உற்பத்தி தடையின்றி நடைபெற்று வருகிறது. மேலும் ஆற்று நீருடன் அதிக அளவில் ஆகாயத் தாமரை உள்ளிட்ட நீர்த்தாவரங்கள் அடித்து வரப்படுவதால் அவை மின் உற்பத்தி நிலைய மதகு பகுதியில் அதிக அளவில் தேங்கி நீரின் வேகத்தை குறைத்து விடுகிறது. சில சமயம் மின் உற்பத்தியில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதனால், நீர்த் தாவரங்களை அகற்றி வருகிறோம். வழக்கமாக 20 மெகாவாட் மின் உற்பத்தி இருக்கையில், தற்போது உற்பத்தி அதிகரித்து 26 முதல் 28 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com